இந்த விபத்து இன்று அதிகாலை 2.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து சென்றிருந்த வேன் ஒன்று அட்டாளைச்சேனை பகுதியில் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், அதில் பயணித்த அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்த வேன் சாரதி ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.