வின்சன்ட பாடசாலையின் புதிய கட்டிடம் அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவினால் திறப்பு

கிருஸ்ணா

மட்டக்களப்பு வின்சன்ட மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம், வகுப்பறைக் கட்டிடம் அடங்கிய மூன்று மாடிக்கட்டிடம் இன்று அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 3 கோடி ரூபாய் செலவில் விஞ்ஞான ஆய்வுகூடமும் வகுப்பறைக் கட்டிடமும் நிர்மாணிக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் திருமதி எம்.குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை அமைச்சரின் வருகையையொட்டி மட்டக்களப்பின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததுடன் இன்று காலை வின்சன்ட பாடசாலை மாணவர்கள் சோதனைகளுக்குள்ளாக்கப்பட்டே பாடசாலை உள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.















--