அம்பாறை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சித் தோ்தலின் போது முற்று முழுதாக பெண்களுக்கென ஏழு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பெண்களுக்கென அமைக்கப்பட்டிருந்த பிரஸ்தாப ஏழு வாக்குச் சாவடிகளின் அதிகாரிகளாகவும் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்ததாக தோ்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக்கும் பெண் பொலிசார் மட்டுமே அமர்த்தப்பட்டிருந்தனர். ஏழு வாக்குச்சாவடிகளிலும் மொத்தமாக எண்பத்தி எட்டு பெண் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிரஸ்தாப ஏழு வாக்குச்சாவடிகளும் அம்பாறையின் சிங்களப் பிரதேசங்களில் மட்டுமே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மேற்படி வாக்குச் சாவடிகள் பெண்களுக்கு சம இடம் வழங்குவது குறித்த பரீட்சார்த்த முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாகவும், எதிர்பார்த்ததை விட சிறப்பாக அதன் செயல்பாடுகள் அமைந்திருந்ததாகவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.