2021 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைக்கு தோற்ற முடியாது போன பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, பரீட்சார்த்திகள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை சுட்டெண், பெயர், பாடம் மற்றும் பரீட்சார்த்தியின் தொலைபேசி இலக்கம் உள்ளடங்கலான விண்ணப்பங்களை WhatsApp அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடியும்.
அனுப்ப வேண்டிய WhatsApp இலக்கம் 071 8156717
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி slexamseo@gmail.com