முன்பள்ளி சிறுவர்களின் போசாக்கு நிலையினை மேம்படுத்தும் வகையில் இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு



(LEON)
முன்பள்ளி சிறுவர்களின் போசாக்கு நிலையினை மேம்படுத்தும் வகையில் இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது

மட்டக்களப்பு ஓசன் ஸ்டார் நிறுவனமும் சண் பி எப் நிறுவனமும் இணைந்த ஏற்பாட்டில் முன்பள்ளி சிறுவர்களின் போசாக்கு நிலையினை மேம்படுத்தும் வகையில் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெறுகின்றது .

முன்பள்ளி சிறுவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் போசாக்கு தொடர்பாக நடைபெறுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்குரிய செயலமர்வில் முன்பள்ளி சிறுவர்களின் போசாக்கு மட்டத்தினை மேம்படுத்துவதற்கான பெற்றோர்களின் பங்களிப்பு ,முன்பள்ளி சிறுவர்களின் போசாக்கு மட்டம் , மற்றும் பாதுகாப்பினை கட்டி எழுப்புவதற்கான உபாயத் திட்டங்கள் போன்ற பயிற்சிகளுடன் இரண்டு நாள் செயல்முறை பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது

இரண்டு நாள் நடைபெறுகின்ற பயிற்சி செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர் எஸ் .சசிகரன் , சண் பி எப் நிறுவன திட்ட இணைப்பாளர் எஸ் .சுதன் , மண்முனை வடக்கு திட்ட பணிப்பாளர் ஆர் . சுதர்சன் , ஓசன் ஸ்டார் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர்கள் ,நிறுவன ஊழியர்கள் , முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .