கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானம் வருடாந்த மஹோற்சவ தேரோட்டம்

(பாறுக் ஷிஹான்  )

வரலாற்று சிறப்பு மிக்க கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த  மகோற்சவத்தின்  வியாழக்கிழமை(29)  தேரோட்டம் 29 வியாழன் காலை 8.45 மணியளவில் ஆலய வளாகத்திலிருந்து ஆரம்பித்து கல்முனை பிரதான வீதியினூடாக தேரோட்ட பவனி இடம்பெற்றது. 

 வள்ளி தெய்வானை சமேதராய் தேரில் ஆரோகணிக்கப்பட்ட முருகப் பெருமான் தேரேறி கல்முனை நகர் ஊடாக வலம்  வருவதையும் மங்கள வாத்தியங்கள் முழங்க மாதர்கள்  வடம் பிடித்து தேர் இழுத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.