காயத்ரி அம்மன் பக்தி இறுவட்டு வெளியீடு!
நாட்டில் சாந்தி சமாதானம் மலர வேண்டியும் தீயசக்திகள் ஒழிந்து போக வேண்டியும் மழை வேண்டியும் நாட்டில் சாந்தி சமாதானம் மலரவேண்டியும் தீயசக்திகள் ஒழிந்து போகவேண்டியும் மழைவேண்டியும் தம்பிலுவில் காயத்ரி தபோவனத்தில் பூரணை தினமான 14.08.2019 புதன்கிழமை நேற்றையதினம் விசேட யாகபூஜைகளும் காயத்ரி அம்மன் பக்தி இறுவட்டு வெளியீட்டு விழா நிகழ்வும் காயத்ரி தபோவன முகாமையாளரும், காயத்ரி உபாசகருமான அ.கந்தராஜா தலைமையில் காயத்ரி தபோவன பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெற்றது.
முதலில் காயத்ரி மகாயாகம் காயத்ரி உபாசகர் சிவபாலசுந்தரத்தால் மகாயாகம் செய்யப்பட்டதுடன் பக்தர்கள் அக்கினி ஹோமத்தில் ஆகூதிகள் கொடுத்து காயத்ரி மந்திரங்களை உச்சரித்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து திருக்கோவில் இரா.தெய்வராஜன் அவர்களின் 21ஆவது வெளியீடான இவ் காயத்ரி அம்மன் பக்தி பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு செய்துவைக்கப்பட்டது .
இவ் வெளியீட்டு நிகழ்வில் பிரதமஅதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் கலந்துகொண்டு வைபவ ரீதியாக வெளியீட்டு வைத்திருந்ததுடன் ஆலய, பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளும், பக்த அடியார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இவ் இறுவெட்டின் பாடல்வரிகளை இரா.தெய்வராஜன் அவர்கள் எழுதியுள்ளார் ,இதில் பாடல்களை பாடிய பாடகர்கள் - இரா.தெய்வராஜன், ஹேமா நிரோஷன் , வசந்தன் சிதுசயோமி. இவ் இறுவெட்டுக்கான இசையினை நல்லதம்பி மோகனராஜு (N.M Studio) மேலும் இவ் இறுவெட்டுக்கான அனுசரணையினை என்.ஏ. லோஜன் அவர்கள் (RN CD Home,தம்பிலுவில்) வழங்கியிருந்தார் மேலும் இதன் போது இவ் இறுவெட்டு நிகழ்வில் பங்கு கொண்ட அனைவரும் அதிதிகளினால் விருதுகள் , பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர் .