(இ.சுதாகரன்)
துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக்கழகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஏற்பாடு செய்த இருபதுக்கு இருபது கிரிகெட் மென்பந்து சுற்றுப்போட்டி துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் 32 கழகங்கள் பங்கேங்கேற்ற நிலையில் இறுதிச் சுற்றுப் போட்டியானது மட்டக்களப்பு எவகிறீன் விளையாட்டுக் கழகத்திற்கும் அம்பாரை தம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக் கழகத்திற்கிடையே துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக் கழகத் தலைவர் சுந்தரமூர்த்தி மனோஜ் தலைமையில் கடந்த ஞாற்றுக்கிழமை(18) நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பாடிய மட்டக்களப்பு எவகிறீன் விளையாட்டுக் கழகமானது 18 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் 96 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தினை நிறைவு செய்த நிலையில் 97 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பாடிய தம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக்கழகமானது 10 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கினை அடைந்து வெற்றிக் கிண்ணத்தினைத் தட்டிக் கொண்டது.
நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண இளைஞர் முன்னணியின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு இஅரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் மட்டு மாவட்ட இணைப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் வெற்றி பெற்ற அணியினருக்கு பெறுமதியான வெற்றிக் கிண்ணத்தினை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.