பா.மோகனதாஸ்
கிழக்கு மாகாண மட்ட தமிழ் மொழித் தினப் போட்டியில் தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம் முதல் இடத்தினை சுவீகரித்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
மட்டு இந்துக் கல்லூரி ,திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி ஆகியவற்றுடன் போட்டியிட்டு கிழக்கு மாகாணத்தில் முதல் இடத்தினை தட்டிக்கொண்டது.
இந்துக்கல்லூரி, உவர்மலை விவேகானந்தா கல்லூரி ஆகியன முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களினை பெற்றுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.
தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம் வில்லுப்பாட்டு பாட்டுப் போட்டியில் முதல் நிலை பெற்றமைக்காக, அயராது உழைத்த நாடகமும் அரங்கியல் துறை ஆசிரியர் யோ. தவதாஸ், பாடசாலை அதிபர், பிரதி அதிபர், தமிழ் சங்கீதப் பாட ஆசிரியர்கள் ஆகியோரை பாராட்டி வாழ்த்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது