ஏறாவூரில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு .



மட்டக்களப்பு ஏறாவூரில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டது.

ஏறாவூர் முகாந்திரம் வீதியில் உள்ள வீடொன்றின் கூரையின் நீர்தாங்கி ஒன்றினுள் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவலுக்கமைய இவை சோதனை  செய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளன

விசேட அதிரடிப்படையினர், இரானுவத்தினர் மற்றும் பொலிசார் சோதனை  செய்து இவற்றை கைப்பற்றியுள்ளனர்.

கூரையின் நீர்த்தாங்கியில் இருந்து 2கைக்குண்டு, மற்றும் 63 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட கைக்குண்டை ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்க வைக்கப்பட்டது. 

இது தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.