பொலிசார் பறிகொடுத்த கை துப்பாக்கி வீதியில் இருந்து மீட்பு






(கனகராசா சரவணன்)


மட்டக்களப்பு புதுநகர் திமிலைதீவு பிரதேசத்தில் பொலிசார் பறிகொடுத்த கைதுப்பாக்கி சம்பவம் நடந்த பகுதி வீதியின் ஒதுக்கு பறத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) மாலை 4 மணிக்கு மீட்டகப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் .

இந்த பறிகொடுத்த கைதுப்பாக்கியை தேடி பொலிசார் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் புலனாய்வு பிரிவினர் இந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர் 

இந்த நிலையில் துப்பாக்கி பறிக்கப்பட்ட பகுதியில் உள்ள 3ம் குறக்கு வீதி சந்தியில் ஒதுக்கு புறத்தில் வீதியில் கிடப்பதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து மோப்ப  நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையின் பின்னர் துப்பாக்கியை பொலிசார் மீட்டுச் சென்றனர்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் கடை உரிமையாளர்கள் உட்பட கைது செய்யப்பட்ட 21 பேரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.