கல்முனை பகுதியில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (07) காலை 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை 1 டி பிரிவு சி.பி.எப் வீதியில் உள்ள தனது வீட்டின் முன்னால் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த புஞ்சி அப்பு கந்தசாமி(வயது-65) என பொலிஸார் குறிப்பிட்டனர்.
நோய் தாக்கத்தின் காரணமாக குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.