கிழக்கு மாகாண தமிழ் மொழித் தினப் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு


[NR]

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நாடாத்தப்பட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகள் கடந்த வாரம் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் இடம்பெற்று இருந்தன இவ் தமிழ் மொழித் தினப் போட்டியில் வில்லூப்பாட்டுப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயத்திறகுட்பட்ட தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவிகள் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனைப் நிகழ்த்தி இருந்தனர்.

இந்நிலையில் தமிழ் மொழித் தினப் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ரி.யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை 12.07.2019 இன்று பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்து.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலய கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், விசேட அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் சி.விநாயகமூர்த்தி, கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ.இரவீந்திரன், நிர்வாக கிராம உத்தியோகத்தர் கண. இராசரெத்தினம், பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர் எஸ்.பரஞ்சோதி தமிழ் ஆசிரியை திருமதி ஜெகதீஸ்வரி நாதன் ஆகியோர் அத்திகளாக கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.