(ஆர்.சயனொளிபவன் )
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 26ம் திகதி ஜனாதிபதி சிறிசேன அவர்கள் புதிய ஒரு அரசாங்கத்தை அமைக்க முயற்சித்ததும் அது தோல்வி அடைந்ததும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயமாகும் ஆனால் அந்த முயற்சி தோல்வி கண்டமைக்கு முக்கிய காரணமாக இருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு தமது ஆதரவை வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அத்தோடு மலையக மக்கள் முன்னணி ஆகிய சிறுபான்மை கட்சிகளாகும்
இவற்றுள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு , முஸ்லீம் காங்கிரஸ் , மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கிழக்கு மாகாணத்தில் பெருமளவு வாக்கு வங்கிகளை கொண்ட கட்சிகளாக காணப்படுகிறது . அதுவும் இந்த மூன்று கட்சிகளும் சென்ற வருடம் அக்டோபர் மாதம் 26ம் திகதிக்கு முன்னர் பல்வேறு பிரச்சனைகளால் அந்த அந்த சமூக மக்களின் நன்மதிப்பை இழந்த நிலையில் காணப்பட்டது , ஆனால் இந்த மூன்று கட்சிகளும் ஜனாதிபதி சிறிசேன அவர்கள் மேற்கொண்ட ஆட்சி மாற்ற முயற்சிக்கு தங்களுடைய முழு எதிர்ப்பையும் தெரிவித்ததோடு இந்த மூன்று கட்சிகளின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த
சதாசிவம் வியாழேந்திரன் தவிர்ந்த , இவர்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து நின்றதோடு அதற்கு மேலாக பல கோடி பெறுமதியான பேரம் பேசல் அமைச்சு பதவிகள் வழங்கல் உட்பட பலமுனை அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரிந்த இன்னொரு விடயமும் ஆகும்
ஜனாதிபதி சிறிசேன அவர்களும் அவரோடு சேர்ந்து நின்றவர்களும் இந்த சிறுபான்மை கட்சிகளுக்கு இன்னோர் வகையான அழுத்தத்தையும் கொடுத்து அதாவது இந்த கட்சிகளின் பாராளமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவை வழங்காமல் நடுநிலையில் இருக்குமாறும் அதற்கும் இந்த கட்சிகள் செவிமடுக்கவில்லை இறுதியில் ஜனாதிபதியின் முயற்சி தோல்வி கண்டதை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தை கலைக்க முயற்சி செய்தார். அதுவும் தோல்வியை கண்டது
கிழக்கு மாகாணத்திலிருந்து பெரும்தொகையான பாராளமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்த மூன்று கட்சிகளும் ஜனநாயக்கத்திற்கும் ஜனாதிபதியின் ஜனநாயகத்திற்க்கு எதிரான இந்த முயற்சிக்கும் சற்றும் தளம்பாமல் எதிர்கொண்டு நின்றமையால் கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே பெரும் வரவேற்பையும் எழுச்சியையும் கொண்டதாக தற்போது காணப்படுகின்றது . இந்த நிலைமை ஜனாதிபதியிற்கும் அவரது குழுவிற்கும் நன்கு தெரியும் .
மிகுந்த ஒரு ஆய்வுக்கு பின்னர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களை கிழக்கு மாகாண புதிய ஆளுநராக தெரிவு செய்ததாக தென்படுகின்றது . அதாவது எவரும் சற்றும் எதிர்பாராதவாறு புதிய ஒரு ஆளுனரை நியமித்ததோடு அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் இந்த மூன்று கட்சிகளும் சவாலாக இருக்க கூடிய ஒருவராகவும் நல்ல அரசியல் அனுபவமும் சாணக்கியம் உள்ளவராகவும் , அரசியல் ஆளுமையும் உள்ள ஒருவர் போன்றும் அவர் இவர்களுக்கு தென்பட்டுள்ளார்.
அதற்கு ஏற்றாற்போல புதிய ஆளுநரும் நியமனம் கிடைத்து சில வாரங்களுக்குள்ளேயே அவருடைய முயற்சிகளை கிழக்கு மாகாணத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை அறிவித்ததன் மூலமும் முன்னர் இருந்த ஆளுனரை விட பல கோணங்களில் துரிதமாகவும் செயற்பட கூடிய ஒருவராகவும் போல தனது தோற்றப்பாட்டை வெளிப்படுத்துகின்றார்
இவை அனைத்திற்கும் மேலாக இங்குள்ள இரு சமூகங்களையும் சமமாகவும் மனிதாபிமானத்தோடும் மதிக்கும் ஒருவர் என்ற வெளிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாகவும் உணர்த்துகின்றார்
முக்கியமாக தமிழ் சமூகத்தை கவரக்கூடிய வகையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள 4 பாடசாலைகள் , தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்துவதற்கு பரிந்துரைத்தமை , மாகாண நிர்வாக தலைமைகளில் தமிழ் சமூகத்தை சேர்ந்த சிலரை நியமித்தமை .
சில நாட்களுக்கு முன்பு எல்லா மக்களின் மனதையும் உருக்குமளவிற்கு நடந்த கோரவிபத்தில் உயிர்நீத்த விரிவுரையாளரின் வீட்டிற்கு விஜயம் செய்து அந்த குடும்பத்தின் ஈடு செய்யமுடியாத இழப்பிற்கு மற்றைய தமிழ் அரசியல்வாதிகள் செல்ல முன்பு ஆளுநர் சென்றது மிகவும் வரவேற்கதக்க விடயம் அத்தோடு மேற்குறிப்பட்ட எல்ல விடயங்களும் தமிழ் மக்களின் மத்தியில் ஆளுநர் அவர் சார்ந்த அரசியல் கட்சிக்கு ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகவும் கருதமுடியும்
அத்தோடு இம் முயற்சிகள் தொடரக்கூடிய சமிக்ஞைகளை செய்வதன் மூலமும் , அதே வேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எஞ்சிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கியும் அவர்களால் தமிழ் சமூகத்துக்கு அதிரடியாக எதையும் செய்ய முடியாததை ஜனாதிபதி அவர்கள் புதிய ஆளுனரை நியமித்து அதனூடாக இப்படியான பல செயற்த்திட்டங்களை மேற்கொள்வதன் மூலமும் கிழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு உள்ள மக்களின் ஆதரவை குழப்பும் ஒரு முயற்சியாகவும் கருதமுடியும்
மறுபக்கம் முஸ்லீம் சமூகத்திற்குள் தற்போது பெரும் நன்மதிப்பை கொண்டுள்ள இரு முஸ்லிம் கட்சிகளுக்கும் முஸ்லிம் சமூகத்திடையே ஒரு அதிருப்தியை உருவாக்குகின்ற வகையில் இந்த நியமனம் கருதப்படுகின்றது
இவர் இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளிலும் உள்ள வாக்காளர்களை பற்றியும் அந்த இரண்டு கட்சிகளிலும் உள்ள அரசியல் தலைவர்கள் பற்றியும் நன்கு தெரிந்தவராகவும் முஸ்லீம் சமூகத்தை பற்றிய அரசியல் அனுபவம் உள்ளவர் ஒருவராகவும் காணப்படுகின்றார் .
ஜனாதிபதிக்கு எஞ்சியுள்ள பத்து மாத காலப்பகுதிற்குள் ஏற்கனவே கூறியது போன்று இவருடைய சாதுரியத்தை பயன்படுத்தி இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளின் வாக்கு வங்கிகளை தளம்பக்கூடிய வகையில் பல அதிரடி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பார் என்பது திண்மம் .
இதன் முதற்கட்டமாக கிழக்கு மாகானத்திலுள்ள முஸ்லிம் சமூகத்தோடு செல்லக்கூடிய புதிய மாகாண கல்வி பணிப்பாளர் நியமனம், கிழக்கு மாகாணத்தில் இருந்து இயங்க கூடிய முக்கிய திணைக்களகங்களுக்கு முஸ்லீம் சமூகத்தின் கூடுதலான வாக்கு வங்கிகளை கொண்ட பிரதேசத்தில் உள்ள அனுபவசாலிகளை திணைக்கள தலைவராக நியமித்தமை ,
இதற்கு மேலாக
அண்மையில் மூதூரில் நடந்த ஒரு துர்ப்பாக்கிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு முதலில் சென்ற முஸ்லீம் தலைவர் என்றதோடு உடன் நிவாரணம் வழங்கியமை , இதனை விட கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் சமூகம் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளுக்கு மக்களுக்கு கவரக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாக அறிவித்தல் , இந்த முயற்சிகள் அனைத்தும் ஒரு வகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு சமூகங்களுக்கும் நன்மை அளிக்க கூடியதாக இருப்பது என்பது ஒரு பக்கம் இருக்க இன்னோர் பக்கத்தில் . கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு சமூகங்களினதும் வாக்கு வங்கியை குழப்பும் ஒரு அதிரடி முயற்சியாகவும் கருதப்படுகின்றது .
ஏனெனில் ஜனாதிபதி சிறிசேன அவர்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதியாக நியமனம் பெற்றதிலிருந்து கடந்த வருடம் அக்ரோபர் மாதம் வரை செய்யாத ஒரு முயற்சியை அவருடைய பதவி காலத்தில்இறுதி 12 மாதத்துக்குள் அதுவும் ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்கள் நியமித்த இந்த முயற்சி இரண்டு சமூக மக்கள் மத்தியிலும் பல ஐயங்களை எழுப்பதவாக உள்ளது
கிழக்கு மாகனத்திலுள்ள தமிழ் சமூகம் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டிய ஒரு கலாச்சாரம் ஆரோக்கியமான இன ஒன்றுமையை புரிந்துணர்வையும் வளர்க்கும் என அந்த அந்த சமூகங்களை சேர்ந்த அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர் .
இந்த அணைத்து முயற்சிகளும் கடந்த ஒரு மாத காலமாக நிகழ்வதானால் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமைப்பாடு எமக்கும் உள்ளது.
-ஆர்.சயனொளிபவன் -
கட்டுரை பற்றிய விமர்சனங்களை கீழே கமெண்ட் இல் தெரிவியுங்கள்