மட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை


(எஸ்.ராம் )

ரணில் தலைமையில்- வடக்கு – கிழக்கு அபிவிருத்தி செயலணி நியமிப்பு.
 கிழக்கு மாகாண மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்துள்ளது
வடக்கு கிழக்கு துரித அபிவிருத்தி செயலணியின் முதலாவது கூட்டம் சில நாட்களுக்கு முன்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது.

பிரதமர், செயலணியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களாக இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சீ.யோகேஸ்வரன், கோடீஸ்வரன் ஆகியோரும், வடக்கு இணைப்பாளர் எஸ்.செல்வின், கிழக்கு இணைப்பாளர் குகதாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 கிழக்கு மாகாண இணைப்பாளராக கனடாவில் இருந்து வந்த திருகோணமலையை சேர்ந்த  குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்

கிழக்கில்  மட்டக்களப்பு மாவட்டமே   தமிழ் வாக்காளர்களை அதிகமாக கொண்டுள்ளதுடன்  முறைப்படி இவ் நியமனமானது மட்டக்களப்பை சேர்ந்த ஒருவருக்கே வழங்கியிருக்க வேண்டும்.

கட்சி சார்பாக என்றால்  தமிழரசு கட்சியின் செயலாளருக்கு வழங்கியிருக்கலாம்  அப்படி அல்லது பட்சத்தில்   பல  ஓய்வுப்பெற்ற அனுபவமுள்ள  நிர்வாக சேவையில் கடமையாற்றிய அதிகாரிகளும் இங்கு உள்ளனர்.  அது மட்டுமின்றி  அம்பாறை மாவட்டத்தை பற்றி தெரிந்த ஒருவராகவும் இருக்க வேண்டும் .

கிழக்கு மாகாணத்திலே  கூடுதல் வாக்கு வங்கியை  கொண்ட மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்களின் பங்களிப்பு  இனி வரப்போகின்ற தேர்தலில் மிக முக்கியமாக இருக்கின்றது , முக்கியமாக  மாகாண சபையை ஆட்சியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றவேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமாயின்  இதில் மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்களின்   பங்கு முக்கியமாக உள்ளது இதை ஊக்குவிக்கும் முகமாக தமிழ்த் தேசிய கூட்ட்டமைப்பின் முடிவுகள் இருக்க வேண்டும்

இன்னுமொரு விடயத்தை குறிப்பிட வேண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தை  பொறுத்தவரை தெற்கில் உள்ள அரசியல் கங்கணங்க்கட்டிக்கொண்டு தமிழ் மக்களின் இருப்பை பலவீனப்படுத்துவதை  கானக்கூடியதாகவுள்ளது   , 
முக்கியமாக மற்ற சமூகத்தை   சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு   இராஜாங்க அமைச்சர் மற்றும் ஆளுநர் பதவிகள் வழங்க்கப்பட்டுள்ளது .
இப்படி தமிழர்களை பலவீனப்படுத்தும் நிலை இருக்கும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையும் மட்டக்களப்பை  கைவிட்டு மாகாண ஒருங்கிணைப்பாளர் பதவியை திருகோணமலைக்கு வழங்கியதை  மட்டக்களப்பு  மக்கள் அதிருப்தியாக பார்க்கிறார்கள் .

கூட்டமைப்புன்  தலைமை   அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ் மக்களை பலவீனப்படுத்த முனைகிறதா என்ற ஐயப்பாடு எழ ஆரம்பித்துள்ளது

 அத்தோடு மட்டக்களப்பின் அரசியல்வாதிகளின் பங்களிப்பு இல்லமால் முடிவுகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது .
இதை மட்டக்களப்பில் உள்ள கூட்டமைப்பின்  அரசியல்வாதிகளும் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கின்றனர் .

இந்த நிலைமை தொடருமாக இருந்தால்  வருகின்ற தேர்தலில் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிப்பது குறைவாக காணப்படும் .  மட்டக்களப்பில் புதிய கட்சிகள் எல்லாம் வர இருக்கின்ற நேரத்தில் . ஒரு அமைப்பினர்  கிழக்கில் உள்ள படித்த சமூகத்தை இணைத்துக்கொண்டு அரசியலில் பிரவேசிக்க முயற்சிப்பதை  அறியமுடிகிறது .எதிர்மறையான முடிவுகளால் இப்படியான அமைப்புக்கள்   வளரும் சந்தர்ப்பத்தை கூட்டமைப்பே ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு தங்களது  முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும் .  திருகோணமலையை மையப்படுத்தியே  கூட்டமைப்பு கொண்டு செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது .

இதே போன்று இன்னொரு சந்தர்ப்பத்தையும்    சுட்டிக்காட்ட வேண்டும் .
கிழக்கு மாகாணத்திலே ( 99.9 % ) தமிழ் வாக்காளர்களை கொண்ட  பட்டிருப்பு தொகுதி  எவ்வளவு முக்கியமானது என கட்சிக்கு தெரியவில்லை கடந்த பாராளமன்ற தேசிய பட்டியலை திருகோணமலையை  சேர்ந்த துரைரெட்ணசிங்கம் அவர்களுக்கு வழங்கியிருந்தனர்.  இப்படி ஒருவர் இருக்கிறாரா என அதிகமானவர்களுக்கு தெரியவில்லை .
இதை பட்டிருப்பு மக்களுக்கு  வழங்கியிருக்கலாம் .  பட்டிருப்பில் உள்ள வெற்றிடத்தை பார்த்து கொழும்பில் இருக்கின்ற   மனோ கணேசன் போன்றோர் எதிர்காலத்தில் இங்கு தங்களது பிரதிநிதிகளை தேர்தலில் இறக்கவுள்ளதாக அறியமுடிகிறது.
 கூட்டமைப்பினர் ஒருவரை இங்கு நியமித்திருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது .

அரசாங்கத்துடன் இணைந்து இப்படியான அபிவிருத்திகளை செய்ய இருப்பதை வரவேற்கிறோம் .
இந்த கட்டுரையை எழுதுவதன் நோக்கம் கிழக்கு மாகாண மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்துள்ளது அதிகளவு வாக்காளர்களை கொண்ட மட்டக்களப்பிலிருந்து  சரியான ஒருவரை மாகாண அபிவிருத்தி குழு தலைவராக நியமித்து  மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவுசெய்ய வேண்டும்  .

அண்ணளவான  தமிழ் வாக்காளர்களின் தொகை
மட்டக்களப்பு - 2, 50,000
அம்பாறை - 70,0000
திருகோணமலை - 70,000

இது பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்ஸ் இல் தெரிவியுங்கள்