வெல்லாவெளியில் விவசாயிகளுக்கு மீண்டும் உரமானியம்

(சித்தா)
விவசாயிகளுக்கு மீண்டும் உரமானியம் வழங்கும் நிகழ்வு வெல்லாவெளி கமநலசேவை நிலையத்தில் வழங்கி வைக்கும் நிகழ்வு பெரும்பாக உத்தியோகஸ்த்தர் திரு. கோ. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் விவசாய அமைப்புகளின் தலைவர், செயலாளர்கள், மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
விவசாயி ஒருவருக்கு ஒரு போகத்திற்கு ஆகக்கூடியது 5 ஏக்கர் காணிகளுக்கே உரம் வழங்கப்படுவதாகவும், இலங்கையில் 12 இலட்சம் விவசாயிகள் இதன் மூலம் நன்மையடைவதாகவும் பெரும்பாக உத்தியோகஸ்த்தர் திரு. கோ. உதயகுமார் தெரிவித்தார்.