இலங்கையில் நாளாந்தம் 300 க்கு மேற்பட்டோர் விவாகரத்து

இலங்கையில் நாளாந்தம் 300-க்கு மேற்பட்ப்பட்டோர் விவாகரத்து செய்து கொள்வதாக கலாச்சார விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ இன்று தெரிவித்தார்.
இலங்கையில் திருமணமான தம்பதியினர் மத்தியில் குடும்ப விரிசல்கள் அதிகளவில் ஏற்படுவதனால் அதற்கு தீர்வு இன்றி விவாகரத்து நடைபெறுகின்றன.

2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுக்கு அமைவாக இலங்கையில் நாளாந்தம் 300 பேர் விவாகரத்து பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்த வயதினர் மற்றும்; ஒரே வயது கொண்டோர் திருமணம் செய்து கொள்வதால் குடும்ப விரிசல் ஏற்படுகின்றன. இதுவே அதற்கு முக்கிய காரணமாகும்.
தற்போது இத் தொகையானது மேலும் அதிகரித்திருக்கக்கூடும் என்றும் அவர் மேலும்   தெரிவித்தார்.

சிதைந்த குடும்பங்களினால் சிறகொடிந்த பிள்ளைகளின் அவலங்கள் (ஓர் சமூக பார்வை) 
http://www.battinews.com/2017/03/blog-post_526.html