(ஜெ.ஜெய்ஷிகன்)
தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நூலகங்கள் செயற்படுத்தி வருகின்றன. கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழியங்கும் பேத்தாழை பொது நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளுக்கான பரிசளிப்பு விழாவும் வாசிப்பு மாத சிறப்பு வெளியீடான 'தடை ஏது' குறுந்திரைப்பட வெளியீடும் இன்று (17.11.2017) பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் அ.தினேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒக்டோபர் மாதம் முழுவதுமாக நூலகத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதோடு தேசிய வாசிப்பு மாத வெளியீடான தடை ஏது குறுந்திரைப்பட இறுவெட்டும் வெளியிடப்பட்டது. இதன்போது இக் குறுந் திரைப்படத்தின் தயாரிப்பாளரான நூலக உத்தியோகத்தர் மரகதம் பிரகாஷ்இ ஒலிப்பதிவாளர் தியாகராஜா விதுர்ஷன், குழந்தை நட்சத்திரங்களான வியாழராஜா அனாசாணிக்கா, சிவலிங்கம் ரதுஸ்காந் செல்வராசா விதுஷாந் மற்றும் பங்காற்றிய கலைஞர்கள் அனைவருமிணைந்து இறுவெட்டினை வெளியிட விழாவின் அதிதிகள் அதனைப் பெற்றுக்கொண்டனர். பிரதம அதிதியாக கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் தி.ரவி மற்றும் அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச செயலகம் சார்பாக பதவிநிலை உதவியாளர் கோறளைப்பற்று பிரதேச சபையின் சனசமுக உத்தியோகத்தர் சி.குகனேசன், நிதி முகாமையாளர் மு.கந்தசாமி, மற்றும் பாடசாலை அதிபர்கள், கல்குடா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்இ கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், வாசகர் வட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.