பேத்தாழை பொது நூலகத்தில் நூலக தன்னியமாக்கல் நிகழ்வு

(ஜெ.ஜெய்ஷிகன்)
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நாடளவிய ரீதியில் நூலகங்களில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் பேத்தாழை பொது நூலகத்தில் இரவல் வழங்கும் சேவையினை மேலும் இலகுபடுத்தும் நோக்கோடு
Barcode system மூலம் நூல்களை பதியும் சேவை இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் S.M. சிஹாப்தின் கருத்துரைக்கையில் இந்த பேத்தாழை பொது நூலகமானது ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மட்டுமல்லாது வெளிமாவட்ட வாசகர்களின் அறிவியல் தேவையினையும் பூர்த்தி செய்து வருகின்றது. அத்தோடு இந்த நூலகத்தின் வளர்ச்சி வரலாற்றிலே பல சாதனைகளை புரிந்த்து கொண்டே வருகின்றது. அதற்காக இங்கே மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றும் அனைத்து நூலக உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு இந்த பெறுமதியான வசதினை எமது நூலகத்திற்கு ஏற்படுத்தித் தந்த பேத்தாழை விபுலானந்தாக் கல்லூரியின் பழைய மாணவரான நன்கொடையாளர் கணேசமூர்த்தி யுவராஜன் அவர்களுக்கும் எமது பிரதேச சபையின் சார்பிலும் பிரதேச மக்களின் சார்பிலும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

 தொடர்ந்து உரையாற்றிய சனசமுக உத்தியோகத்தர் சி.குகனேசன் இவ்வசதியின் ஊடாக எமது நூலகம் தன்னியமாக்கல் சேவையின் மற்றுமொரு படிநிலையினை அடைந்திருக்கிறது. இந்த வசதியினூடாக நூலக ஆவணங்களை இலகுவில் கணணனியில் பதிவேற்றுவதோடுஇ காலதாமதம் இல்லாமலும் நேர்த்தியான முறையிலும் இரவல் வழங்கக்கூடியதாக இருக்கும். இதேபோன்று எதிர்காலத்திலும் இந் நூலகம் பல்வேறு வகையிலும் வளர்ச்சியடை வாழ்த்துகின்றேன் என்றார். குறித்த பேத்தாழை பொது நூலகம் கடந்த வருடம் இணையம் ஊடாக நூலக வசதியினை அணுகக் கூடிய
Online Public Access Catalogue வசதியினை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.