இலங்கை கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இன்று 28 வெளியான 2016 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் ஆர்.வெஸ்லியோ வாஸ் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ..........
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இன்று வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் 17 பேர் 9 ஏ சித்திகளையும்,10 பேர் 8 ஏ சித்திகளையும்,7பேர் 7ஏ சித்திகளையும் பெற்று எமது பாடசாலைக்கும் ,மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
"எமது பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் முழுமையான விபரம் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் எமது பாடசாலை அனுப்பப்பட்ட பின்னர் அதை முழுமையாக வெளியிட முடியும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்