கிழக்கிலங்கை இந்து சமய அபிவிருத்தி சபையினரால் வாழக்காலை கன்னித்தமிழ் இந்து கலா மன்றத்தினருக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 39ம் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட வாழக்காலை கிராத்தில் உள்ள கன்னித்தமிழ் இந்துக்கலா மன்றத்தினருக்கு கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி
சபையினரால் இன்று(13) இசைக்கருவிகள், உலர் உணவுப் பொருட்கள், மாணவர்களுக்குரிய கற்றல் புத்தகங்கள், இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் செயற்பாடுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.


கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஸ்யந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் கணக்காளரும், களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குருவுமாகிய சிவஸ்ரீ மயூரவதன குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் சி.குணநாயகம், வாழக்காலை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கி.திருமேனிப்பிள்ளை, கிராம உத்தியோகத்தர் சிறிதரன், கிராம அகிவிருத்திச்சங்க தலைவர், வாழைக்கால ஆலய பதலைவர், கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் உறுப்பினர்கள், பொது மக்கள், மாணவர்கள், கன்னித்தமழ் கலா மன்றத்தின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்து மன்றங்கள் வெறுமனே பஜனை வழிபாட்டுடன் மட்டும் நில்லாது இயன்றளவு அக்கிராமத்தில் கல்வி, கலை, மற்றும் பொது பணிகளிலும் ஈடுபடுகின்ற போதுதான் நிலைத்திருக்க முடியும் எனவும் பஜனை நிகழ்வு இக்கராமத்தில் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் எனவும் இது போன்ற நிகழ்வுகள் எமது சபையினரால் கிராமங்கள் தொடர்ந்து நடைபெற ஏற்பாடுகள் உள்ளது எனவும் கிழக்கலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் தவைர் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

மேலும் இந்நிகழ்வில் அதிதிகள் உரை, ஆன்மீக சொற்பொழிவுகள், மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து சபையின் செயலாளர் சு.உதயகுமார் அவர்களின் நன்றியுரையுடன் முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.