(சித்தா)
வெல்லாவெளியினைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.சீ.கோபாலசிங்கம் அவர்கள் வெல்லவூர்க் கோபால் எனும் புனை பெயரில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவருகின்றார். இந்த வகையில் வெல்லவூர்க் கோபால் அவர்களின் 'மட்டக்களப்பு தேசம்' வரலாறும் வழக்காறும் நூல் வெளியீடு எதிர்வரும் 31.07.2016 காலை 10.05 மணிக்கு மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சட்டத்தரணி மு.கணேசராசா, தலைவர், மட்டக்களப்பு தமிழ் சங்கம், ஆணையாளர், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவர்களின் தலைமையில் நூல் வெளியீடு நடைபெறவுள்ளது. இவ் விழாவில் பேராசிரியர்.சி.மௌனகுரு, பேராசிரியர்.மா.செல்வராசா, கலாநிதி.சா.தில்லைநாதன் அவர்களுடன் பிரதம அதிதிகளாக திரு.எம்.உதயகுமார், மாநகர ஆணையாளர், மட்டக்களப்பு, திரு.க.பாஸ்கரன்,வலயக் கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு கல்வி வலயம், ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ் விழாவில் சிறப்புரையினை திரு.ஞா.தில்லைநாதன்,சிரேஸ்ட்ட விரிவுரையாளர், செல்வி.கிம்பர்லி கோலர், அமெரிக்கா கலிபோனியா பல்கலைக்கழகம், அவர்களும் ஆற்றவுள்ளனர் வெளியீட்டுரையினை மட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய முந்நாள் அதிபர் திரு.த.விவேகானந்தம் அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.