மரபுவழிச் சமூகமும், குடியேற்றச் சமூகமும்
1815 மார்ச் 2ம் திகதி கைச்சாத்திடப்பட்ட கண்டி ஒப்பந்தத்தில் ஆங்கில ஆட்சியாளர் சார்பில் ஆளுனர் றொபேட் பிறவுண்றிக் ஆங்கிலத்திலும் எகலப்பொல, கண்டி அரசின் 2ம் அதிகாரியாகவும் சப்பிரகமுவவின் திசாவையாகவிருந்த பிலிமத்தலாவை, நான்கு கோரளையின் திசாவையாகவிருந்த பிலிமத்தலாவை மற்றும் மாத்தளையின் திசாவையாகவிருந்த ரத்வத்தை ஆகிய நால்வர் தமிழிலும் மூன்று கோறளையின் திசாவையான மொல்லிகொட வலப்பனயின் திசாவையான துல்லெவ, வெல்லச மற்றும் விந்தனையின் திசாவையான மில்லெவ ஆகிய மூவரும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளைக் கலந்தும் ஏழு கோறளையின் திசாவையான மொல்லிகொட, ஊவா திசாவையான மொனராவில, தமன்கடுவ திசாவையான கலகம, நுவர-கலாவிய திசாவையான கலகொட ஆகியோர் சிங்களத்திலும் ஒப்பமிட்டனர்.
1815 மார்ச் 2ம் திகதி கைச்சாத்திடப்பட்ட கண்டி ஒப்பந்தத்தில் ஆங்கில ஆட்சியாளர் சார்பில் ஆளுனர் றொபேட் பிறவுண்றிக் ஆங்கிலத்திலும் எகலப்பொல, கண்டி அரசின் 2ம் அதிகாரியாகவும் சப்பிரகமுவவின் திசாவையாகவிருந்த பிலிமத்தலாவை, நான்கு கோரளையின் திசாவையாகவிருந்த பிலிமத்தலாவை மற்றும் மாத்தளையின் திசாவையாகவிருந்த ரத்வத்தை ஆகிய நால்வர் தமிழிலும் மூன்று கோறளையின் திசாவையான மொல்லிகொட வலப்பனயின் திசாவையான துல்லெவ, வெல்லச மற்றும் விந்தனையின் திசாவையான மில்லெவ ஆகிய மூவரும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளைக் கலந்தும் ஏழு கோறளையின் திசாவையான மொல்லிகொட, ஊவா திசாவையான மொனராவில, தமன்கடுவ திசாவையான கலகம, நுவர-கலாவிய திசாவையான கலகொட ஆகியோர் சிங்களத்திலும் ஒப்பமிட்டனர்.
பண்டிற் கலாநிதி நந்தசேன விஜயசேகர தனது ஆய்வு நூலில் (The Sinhalese Page:392) கண்டியரசின் கீழிருந்த வெல்லச - விந்தன திசாவைப் பிரதேசத்தில் புலிக்கொடியே பறந்ததெனவும் இதனடிப்படையில் அக்காலகட்டத்தே அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்களாவே இருந்திருக்க முடியும் எனவும் உறுதிபடக் கூறுகின்றார். உண்மையில் இப்பிரதேசம் வரலாற்று ரீதியாக பண்டைய மட்டக்களப்புத் தேசத்திற்கே உரியதென்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்று மட்டக்களப்புத் தேசத்தே வாழுகின்ற சிங்கள மக்களை இருவேறு பிரிவாக அடையாளப்படுத்த முடியும்.
1. பண்டைய மட்டக்களப்புத் தேசத்தின் மரபுவழிச் சமூகம்
2. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட குடியேற்றச் சமூகம்.
பண்டைய மட்டக்களப்புத் தேசத்தின் மரபுவழிச் சிங்கள மக்களது வரலாறு ஆரம்ப காலம் முதலே தமிழரோடு இணைவுபட்டுச் செல்வதை நம்மால் அவதானிக்க முடியும். வட கலிங்கமான சிங்கபுரம் சார்ந்து வந்து மட்டக்களப்புப் பூர்வீக சரித்திர ஏடுகளில் சிங்கர் என அடையாளப்படுத்தப்படுகின்ற இம்மக்கள் பற்றிய கவனம் ஆய்வில் முக்கியத்துவம் பெறுவதாகவேயுள்ளது. இம் மக்கள் உன்னரசுகிரி தோற்றம் பெற்ற காலத்தே அச்சிற்றரசுக்கு உட்பட்டும் பின்னர் நாடுகாடுப்பற்று, நாதனைப்பற்று வன்னிமைப் பிரிவுகளிலும் அதன் பின்னர் வேகம் பற்று விந்தனைப்பற்று பிரிவுகளிலும் வாழ்ந்த மக்களின் முக்கிய பிரிவினராகக் கொள்ளப் போதிய சான்றுகள் உள்ளன. இலங்கையின் தொல்லியல் ஆணையாளராக மிக நீண்டகாலமாகப் பணிபுரிந்தவரும் சிறந்த கல்வெட்டாய்வாளருமான கலாநிதி பரணவிதான (Inscription of Ceylon - Dr.S.Paranavitana) மண்முனைப் பற்றில் மியுஸ்ரீன்கணவெகர், வேகம்பற்றில் தமண, பறகாகெல, றஜகல, உகன, உப்பிற்றிகல, வட்டினாகல, கலகம, சம்மாந்துறைப் பற்றில் அம்பாரை, மல்வத்தை, அக்கரைப்பற்றில் கல்லோடை, குருவில, மெட்டையாகல, முல்லைக்கொழுந்து மலை, நாடுகாடுபற்று மற்றும் உன்னரசுகிரியில் தொட்டகல, கிளுவான, கிரிபொக்குணகல, கோணாகல, குடும்பிகல, நிலகிரிசாய, பாணம, திசலானகம, சங்கமன்கண்டி, வெகரகந்த, விகாரகல போன்ற இடங்களில் சிங்கள மக்கள் வாழ்ந்தமை பற்றி தனது ஆய்வில் குறிப்பிடுகின்றார;. இம்மக்கள் பொளத்தத்தைப் பின்பற்றியிருப்பர் என்பதை மறுக்கமுடியாது.
இலங்கையில் முக்கியப்படுத்தப்பட்ட மகேச (சிவ) வழிபாட்டில் தேவநம்பிய தீசனின் ஆட்சியில் பௌத்தம் புகுந்தபோது மட்டக்களப்புத் தேசத்தில் தமிழர் பிரதேசங்கள் பெருமளவு அம்மாற்றத்திற்கு உட்பட்டதாக வரலாறில்லை. எனினும், கி.பி 2ஆம் நூற்றாண்டின் பின்னர் பெறப்படும் தகவல்களில் பண்டைய மட்டக்களப்புத் தேசத்தின் சில பகுதிகளில் பௌத்தம் தமிழரது வழிபாட்டியலிலும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை அறியமுடிகின்றது. புத்தர் பெருமான் மச்சபுராணம் மற்றும் பாகவத புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் இந்துமதக் கடவுளரில் ஒருவரான மகா விஷ்னுவின் மறு அவதாரம் என்ற நம்பிக்கையானது இந்து மதத்தவர் மத்தியில் நிலவியதை நாம் மறுக்க முடியாது. இதன் அடிப்படையில் இத்தேசத்தே பெரும்பான்மைச் சமூகமாக அன்று வாழ்ந்த தமிழர்கள் கி. பி 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் வரை பௌத்தத்திற்கு மதிப்பளித்தே வந்துள்ளனர். மாகோனின் ஆட்சிக் காலத்தினை விடுத்து அதற்கு முன்னதாகவும் பிற்பட்டும் பௌத்த மதம் இப்பிரதேசத்தில் வேர்விட ஆட்சி முறையில் சாதகமான சூழலே இருந்துள்ளது. மகியங்கணை, மகா ஓயா, உதயகிரி போன்ற பண்டைய பௌத்த வழிபாட்டுத் தலங்கள் இக்காலத்தே தோற்றம் பெற்றமை தெரிகின்றது. வழிபாட்டுத் தன்மையில் இந்துவும் மகாயான பௌத்தமும் பெருமளவு ஒத்த தன்மையைக் கொண்டிருந்தமையால் மட்டக்களப்புப் பிரதேசத்தே வாழ்ந்த சிங்கள மக்கள் இந்துக் கோவில்களிலும் வழிபாடு செய்பவர்களாயினர்.
அத்துடன் சுதந்திரத்திற்கு முற்பட்டு வாழ்ந்தவர்கள் தமிழில் சரளமாகப் பேசும் ஆற்றலுடையோராய் இருந்தனர். மேலும் இப்பகுதியில் வாழ்ந்த வேடர் சமூகத்தினரும் தமிழ் மக்களுடன் இணைப்பு பெற்றதைப் போன்றே சிங்கள மக்களும் இணைப்புப் பெற்றனர். இம்மக்கள் கதிர்காமம், கட்டகாமம், முப்பனை (மொனராகலை) அத்தி மலை, பாணமை, பொத்துவில், அக்கரைப்பற்று, தமணை, அம்பாரை, உகனை, கோம்பானை, பக்கி எல்லை (பழையது), மகாஓயா, மன்னன்பிட்டி, முத்துக்கல், தம்பன்கடவை , திரிகோணமடு என விரிவுபடலாயினர். இதன் தாக்கத்தால் அப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் காலப்போக்கில் படிப்படியாக சிங்கள மக்களால் உள்வாங்கப்படலாயினர். அக்காலத்தே தமிழர்களுடன் இவர்கள் கொண்டிருந்த உறவுமுறைகளின் தழும்பு இப்பகுதிகளில் இன்னும் மாறாமலேயுள்ளது. எதிர்மன்னசிங்க வன்னியன், உகன வன்னியன், முத்துக்கல் வண்டையா உடையார், கோம்பானை சபாரத்ன உடையார், உகனை ஜெயசுந்தர உடையார் போன்றவர்களின் வாரிசுகள் இன்னும் இதனை அடையாளப்படுத்துபவர்களாகவே உள்ளனர். இங்கு முக்கியம் பெறுகின்ற தமிழ் சமூகக் குடிவழிகளில் சிங்களக்குடி என ஒரு மரபினர் இன்றும் நிலை பெறவே செய்கின்றனர்.
ஆங்கிலேயரின் ஆட்சியின்
தொடக்க காலமான
1824ல் மேற்கொள்ளப்பட்டு
1827ல் வெளியிடப்பட்ட சாதிக்
கணக்கெடுப்பில் இப்பிரதேசத்தே
வாழ்ந்த 32690 மொத்தச் சனத்தொகையில்
இம் மக்களின்
எண்ணிக்கை 2026 ஆக இருந்தது. நாடு
சுதந்திரம் அடைவதற்கு சற்று
முற்பட்ட கணக்கெடுப்பில்
202987 ஆன ம்டக்களப்பு
பிரதேச சனத் தொகையில் இவர்கள்
11,891 ஆக இருந்தார்கள்.
அக்காலத்தே வேகம் - விந்தனை மற்றும்
பாணமை பகுதிகளில்
பரவலாக வாழ்ந்த
இவர்கள் சுமார்
6 வீதம் எனக் கணிக்கப்பட்டனர்.
மீள் பார்வை 5 வரை தொடரும்...........
மீள் பார்வை 5 வரை தொடரும்...........