வாகரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

(சுபஜன்)
வாகரை கடலோரத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கடலோரத்தில்  ஆணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
வாகரை பிரதேசசபையில் சாரதியாக பணியாற்றும் ராசதுரை டக்லஸ் (வயது 26) எனும் நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என பொலிஸாசார் தெரிவித்தனர். இது குறித்து தாம் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்