அரியமலர் அருணகிரிநாதன் இளஞ்சைவப்புலவர் தேர்வில் சித்தி

 பெருமையுடன் வாழ்த்துகிறோம்.

(விதுலலோஜன்) அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடாத்தும் 2015ம் ஆண்டுக்கான சைவப்புலவர்,இளஞ்சைவப்புலவர் தேர்வில் மட்டக்களப்பு கிரானை சேர்ந்த திருமதி.அரியமலர் அருணகிரிநாதன் இளஞ்சைவப்புலவர் தேர்வில் சித்தி பெற்றுள்ளார் இவர் மட்டக்களப்பு இந்துக்கல்லுரியின் இந்துநாகரிகத்துறை ஆசிரியையாக கடமை புரிகின்றார். கடந்த 25.10.2015ம் திகதி யாழ்ஃகீரிமலை சிவபூமி மடாலய மண்டபத்தில் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி,அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இவருக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது 6பேர் சைவப்புலவர்களாகவும் 16பேர் இளஞ்சைவப்புலவர்களாகவும் பட்டமளிக்கப்பட்டனர்.

திருமதி.அரியமலர் அருணகிரிநாதன்  அவர்கள் இந்து சமயத்தினை வளர்க்க வேண்டும் என்று அர்ப்பணிப்போடு பணியாற்றுபவர் மட்டக்களப்பு இந்துக்கல்லுரியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய வளர்ச்சியில் ஈடுபடும் இவர் ஆலய பரிபாலன சபையில் பொருளாளராகவும் இருக்கின்றார் இந்து மாமன்ற பொறுப்பாசிரியையாக இருந்து சமய விழுமியங்களுடன் கூடிய இந்து சமய கல்வியை மாணவருக்கு ஊட்டுவதுடன்,சமய,சமுக தொண்டுகள்,சொற்பாழிவுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இவர் இது பற்றி கூறுகையில் தமக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பித்த குருவான பேராசிரியர் டாக்டர்.மா.வேதநாதன் (தலைவர்,இந்து நாகரிகத்துறை)ஜயா அவர்களால் தமக்கு இளஞ்சைவப்புலவர் பட்டம் கிடைத்ததை இட்டு மனமகிழ்ச்சி அடைவதாகவும் அத்தோடு இப்பட்டம் பெறுவதற்கு உறுதுனையாக இருந்த இறைவனுக்கும், எனது கணவருக்கும், பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும், மற்றும் அனைவருக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார்.