ஸ்ரோமா நோய் பராமரிப்பு பயிற்சி முடித்த தாதியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


(சிவம்)

ஸ்ரோமா நோய்த்தாக்கத்திற்குள்ளான நோயாளிகளைப் ; பராமரித்தல் மற்றும் சிகிட்சையளிப்பதற்காக 4 நாட்கள் கொண்ட பயிற்சiயி முடித்த தாதியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  வெள்ளிக்கிழமை (28) நடைபெற்றது.

ஸ்ரோமா நோய் என்பது சிறுநீர்ப்பை, பெருங்குடல் மற்றும் குதம் என்பவற்றில் ஏற்படும் புற்றுநோயாகும். குறித்த உறுப்புகளை முற்றாக அகற்றி மலம் , சலம் போன்ற களிவுகளை வெளியேற்றுவதற்காக குறித்த குளாய்களைக் கொண்டு வயிற்றுக் பகுதியில் துளையை இட்டு களிவுகளை பிளாஸ்டிக் பைகளில் சேகரிப்பதாகும்.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகம், சத்திரசிகிட்சைக் கல்லூரி, மட்டக்களப்பு வைத்தியச் சங்கம், .ரி. தெரப்பி தாதியர் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலிருந்து 50 தாதியர்கள் இப்பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தனர்.

உள்ளுர் வளவாளர்களுடன் இத்தாலியைச் சேர்ந்த பேராசிரியர் கார்லோ பெஸ்கொலர், இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஹரிகஸ் புஸ், இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் கமல்டீன் ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.

இலங்கையில் சுமார் 5000 பேர் இந'நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு யுத்த காலத்தில் வடக்கு. கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகம் பேர் உள்ளதாக .ரி. தெரப்பி தாதியர் சங்க அதிகாரி தெரிவித்தார்.

குறித்த சங்கத்தினால் 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சியில் நாடெங்கிலுமிருந்து  300 பேர் பயிற்ச்சி பெற்று வெளியேறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

லங்கா வைத்தியசாலை, ஆசீரி சத்திரசிகிட்சை வைத்தியசாலை, மட்டக்களப்பு, ராகம, குருநாகலை, ஜெயவர்த்தனபுர, களுபோவில போதனா வைத்தியசாலைகள், கொழும்பு தேசிய வைத்தியசாலை, மாத்தறை ஆதார வைத்தியசாலைகளில் குறித்த பயிற்சி பெற்ற தாதியர்கள் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.