தேசிய கீதம் தமிழில் இசைத்ததால் பிரதேச செயலக ஊழியர் மீது தாக்குதல்


(பேரின்பராஜா சபேஷ்) கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக மைதானத்தில் தேசிய கீதம் தமிழில் இசைத்தமைக்காக ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக ஊழியர்கள் பல்கலைக் கழக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவமொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக மைதானத்தில் கடந்த 14 ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த இயந்திர உலகில் உற்பத்தியாளர்களின் புத்தாக்கச் சிந்தனையார் கொண்ட  கண்காட்சி இறுதிநாள்; நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டமைக்கு பல்கலைக் கழக சிங்கள மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பிரதேச செயலக ஊழியர்கள் மீது தாக்கியுள்ளனர்.

அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் தாக்குதலைத் தடுத்து காயமடைந்த பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் பத்தக்குட்டி சுமன் (வயது 29) செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவ+ர்ப் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளில்; ஈடுபட்டுள்ளனர்.