.jpg)
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா கடலோரத்தில் அடையாளம் காணப்படாத சடலமொன்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை காலை தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த புன்னைக்குடாக் கடலோரத்தில் சுமார் 35 மதிக்கத் தக்க ஆணின் சடலம் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இத் தகவலைத் தெரிவித்த பொலிஸார் சடலம் யாருடையது என அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.