எதிர்வரும் 29ம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் மட்டக்களப்பு சிவானந்த தேசியபாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு நகருக்கு வருகைதரவுள்ளனர்.
மட்டக்களப்பு நகருக்கு வருகைதரும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவில் சந்திரிகா பண்டாரநாயக்க, மனோ கணேசன், ரிசாட் பைருதீன், உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு நகருக்கு வருகை தரும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், மதகுருமார்கள் மற்றும் படித்த இளைஞர் யுவதிகளையும் சந்தித்து அவர்களின்; தேவைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்