கிழக்குப் பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் பகிடி வதைக்குட்படுத்தப்பட்டு மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

(சிவம்)

கிழக்குப்  பல்கலைக் கழக புதிய ஆண்டிற்கான கலைப்பீட மாணவர்கள் மூவர் பகிடி வதைக்குட்படுத்தப்பட்டு மயங்கிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை (03) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கூழாவடியைச் சேர்ந்த ஆர். தனஞ்செயன் (20) மாமாங்கத்ததை சேர்ந்த ஆர். விஜிகரன் (22) மற்றும் புன்னைச்சோலையைச் சேர்ந்த சி. சபேஸ்கரன் ( 21) ஆகியோரே சிரேஷ்ட மாணவர்கள் ஏழு பேரினால் தாக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேர்களிடமும் தலா ரூபாய் 1000 கொண்டு வரும்படி சிரேஷ்ட மாணவர்கள கோரியுள்ளனர்.  அவர்களை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகழயற் கற்கைகள் நிலையத்தின் பின்புறத்திற்கு அழைத்துச் சென்று ; அவர்களின் பணத்திற்கு பியர் மதுபானத்தையும் மற்றும் கோல்ட் லீப் சிகரட்டையும் வாங்கி மதுபானத்தைப் பருகவும் செய்து சிகரட்டை புகைக்கவும் செய்து பலமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் புன்னைச்சோலையைச் சேர்ந்த சி. சபேஸ்கரன் என்பவரே கூடுதலாக தாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.