திருகோணமலையில் இராணுவ வீராங்கனை தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இரா­ணுவ வீராங்­கனை ஒருவர் தன்னை தானே துப்பாக்­கியால் சுட்டு தற்­கொலை செய்து கொண்ட சம்­பவம் ஒன்று திரு­கோ­ண­மலை 22 ஆம் படைப்­பி­ரிவு இரா­ணுவ முகாமில் கடந்த 8 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.
இச்­சம்­பவம் தொடர்­பாக தெரிய வரு­வ­தா­வது, காலி மாவட்­டத்தின் அகங்­கம பிர­தே­சத்தை சேர்ந்த நமிதா டிசானி (வயது 29) என்­பவர் கடந்த 8 வருட கால­மாக இரா­ணு­வத்தில் பணி­யாற்றி வந்­துள்ளார்.


இந்­நி­லையில் கடந்த 8 ஆம் திகதி மாலை 4 மணி­ய­ளவில் துப்­பாக்­கியால் தனது வயிற்­றுப்­ப­கு­தியில் சுட்டுக் கொண்டு உயி­ரி­ழந்­துள்ளதாக தொரியவருகிறது.
சம்­பவ இடத்­திற்கு சென்ற திரு­கோ­ண­மலை நீதி­மன்ற பதில் நீதிவான் தி.திருச் ­செந்­தில்­நாதன் சட­லத்தை பார்­வை­யிட்­ட­துடன் ஸ்தல விசா­ர­ணை­க­ளையும் நடத்­தினார்.
பின்னர் சடலத்தை அவருடைய சகோதரியிடம் ஒப்படைக்குமாறு உத்தர விட்டார்.