பெண்ணின் சடலம் மீட்பு

  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பதுறியா வீதியிலுள்ள மரைக்கார் லேனைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான எம்.சித்தி நழீபா(33) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் சடலம் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. .இது தொடர்பான விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பெண் மூன்று பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.