நான்கு பேர் கொண்ட குழு தாக்கியதில் ஒருவர் பலி

திருகோணமலை மாவடிச்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை இவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.



மாவடிச்சேனை பகுதியை சேர்ந்த 28 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்துள்ள நபர், நான்கு பேர் கொண்ட குழுவினரால் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை சேதுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.