அக்கரைப்பற்றில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு

(எம்.ஏ.றமீஸ்)

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் இன்று (08) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. 

இதன்போது அக்கரைப்பற்று பிரதான வீதியூடாக ஊர்வலப் பேரணி ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமாகி அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கைச் சென்றடைந்தது. 

அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சுற்று வட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு வீதி நாடகம் இதன்போது இடம்பெற்றதுடன், அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்ற பிரதான நிகழ்வின்போது பெண்கள் உரிமைகள், பெண்கள் சமூகத்தில் சமமாக மதிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றிய விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது மட்டக்களப்பு மற்றும்; அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது.