(து.கௌரீஸ்)
மூன்றாவதுகண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்கள் வட்டத்தினர் நடத்தும் 'சமத்துவத்திற்கான ஆண்களின் குரல்கள்' எனுந் தலைப்பிலான நிகழ்ச்சிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16.03.2014 ) மு.ப 09.30 – பி.ப 01.30 மணி வரை மட்டக்களப்பு திருமலை வீதி ஊறணியிலுள்ள புனித ஜோண்ஸ் தேவாலய சமூக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த பத்து வருடங்களாக பால்நிலைச் சமத்துவம், பெண்ணிலை வாதம் சார்ந்து செயற்பட்டுள்ள மூன்றாவதுகண் நண்பர்களின் செயற்பாடுகளும் புரிதல்களும் பற்றிய அனுபவங்களின் பகிர்வுகள் கருத்தரங்கினூடாகவும், கலையாற்றுகைகள் வாயிலாகவும் கண்காட்சிகளூடாகவும் இந்நிகழ்ச்சியில் முன்வைக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
பிரபல பெண்ணிலைச் செயற்பாட்டாளர் திருமதி கமலா வாசுகி அவர்களின் தொடக்கவுரையுடன் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் பல்வேறு பெண்ணியச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணிலைச் செயற்பாடுகளில் ஆர்வமுள்ள அனைவரையும் மூன்றாவதுகண் நண்பர்கள் அழைக்கின்றார்கள்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4