பழுகாமம் பாரம்பரிய வைத்தியர் ஆறுமுகம் அவர்களின் இறுதிகிரியை நிகழ்வு

(வரதன்)
கிழக்கு மாகாணத்தில் கட்டு வைத்தியத்துறையில் நிபுணத்துவம் பெற்ற
ஆறுமுகம் மாஸ்டர்அவர்களின் இறுதிக் கிரியை நிகழ்வு இந்து சமய முறைப்படி கிரியைகளின்பின் பழுகாமம் பொது மயானத்தில் அன்னாரது
உடல் அக்கினியில் சங்கமமானது .

அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மட்டு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச செயலாளர்கள்
மாவட்ட திட்டமிடல் அதிகாரிகள் அரச திணைக்கள உயர் அதிகாரிகள்
வர்த்தகர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இவ் சமய சமூக சேவையாளரின் இறுதியஞசலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.


அன்னார் வைத்தியத்துறையில் கைவிடப்பட்ட நோயாளிகளை இனமத வேறுபாடின்றி தனது பாரம்பரிய வைத்தியத்தின் மூலம் இலவசமாக குணப்படுத்திய ஆசான் அன்னாரின் இழப்பு தமிழ் பேசும் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத ஓரிழப்பாகும். கிழக்கு மாகாணத்தின் மாபெரும் மருந்து விருட்சம் சரிந்து விட்டதாக அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட கல்விமான்கள் கண்ணீர் மல்க தமது அனுதாப உரையில் தெரிவித்தனர்.