நாட்டின் பொருளாதார நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போதே கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரக் கஷ்டம் காரணமாக சுமார் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளர்கள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
கடும் பொருளாதார கஷ்டங்கள் மட்டுமன்றி போதுமான பாடசாலை வசதிகள் இன்மையும் அதற்கு காரணமாக அமைந்துள்ளதாக பிரஸ்தாப ஆய்வின் போது மேலும் தெரிய வந்துள்ளன.அதிலும் குறிப்பாக மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசத்திலேயே அவ்வாறான குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அங்குள்ள குடும்பங்கள் கடும் பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், தங்கள் குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதற்கான பொருளாதார பலம் அவர்களிடம் இல்லை என்றும் ஊடகங்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.